Skip to main content

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?

திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா?  மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்!

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? 


1) தினப்பொருத்தம்:- 

கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2) கணப்பொருத்தம்

கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும்.
தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3) மகேந்திர பொருத்தம் :- 

சந்ததி விருத்தி உண்டா இல்லையா என்பதை இதன் மூலம் கண்டறியலாம். பொருத்தம் இருந்தால் சந்ததி விருத்தி பற்றி அறிய இது உதவுகிறது. இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது என்றால் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்த இல்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக்கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார்.

4) ஸ்திரி தீர்க்கம்:- 

பெயரை வைத்தே கண்டறியலாம். பெண்ணின்  ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறு பாடு ஏற்படுகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் இருந்தால் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை என்றால் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேலன்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது 8ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில்12ம் ஸ்தானம் அல்லது 2ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்.

5) யோனிப் பொருத்தம்:-  

இது முக்கியமானதாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை ஆகியவறறை தீர்மானிக்கும் அளவுகோல் என்றறு சொல்லலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் றை இதுவாகும். நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண்& பெண் எனப்பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனற்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகைமிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை என்க. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமம்தான்! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமம்தான். பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும்  இது மிக முக்கியம்.

6) ராசி பொருத்தம்:- 

பெண் ராசி தொட்டு ஆண் ராசி6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறதுசாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம்மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் பெண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை. எனவே பெண் ராசி முதல் ஆண்ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய 6 ராசிகள் பொருந்தும் எனலாம். இதன் அட்டவணை.

7) ராசி அதிபதி பொருத்தம்

பனிரெண்டு ராசிகட்கு அதிபதிஉண்டு. அந்த அதிபதிகிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்குபகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம்எனில் பொருத்தம் உண்டு.

8) வசிய பொருத்தம்

இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்யோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளேவசியமாக அமையும். இது அமைந்தால் இன்னம் சிறப்பாகும். மற்றபடி இப்பொருத்தம்இல்லை எனினும் அட்டவணை இதோ.

1. மேசம்  –  சிம்மம், விருச்சிகம்
2. ரிசபம் –  கடகம், துலாம்
3. மிதுனம் –  கன்னி
4. கடகம் –  விருச்சிகம், தனுசு
5. சிம்மம் – துலாம்
6. கன்னி – மிதுனம், மீனம்
7. துலாம் – மகரம்
8. விருச்சிகம் – கடகம், கன்னி
9. தனுசு  – மேசம், கும்பம்
10. மகரம் – மீனம்
11. கும்பம் – மேசம்
12. மீனம் – மகரம்

எனது ஆய்வின்படி வசியப் பொருத்தம் என்பது 12 ராசிகளுக்கிடையேயும் வசிகரம் ஏற்படும்தான்.

9) ரச்சுப் பொருத்தம்

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதி காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன்எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திமகுறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டுபுற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின்படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன்ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனையபொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லை யெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமேபலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள்நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சுபொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனிஇது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்துவகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவைபாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

10) வேதை பொருத்தம்

வேதை எனும்சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம்வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சுபொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகியகால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதைநட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மணவாழ்வும் துன்பமாகவே அமையும்.

தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ  ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து.

திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம்.
பொருத்தம் பார்த்த பின்பு ஜாதகத்தில் என்னன்ன தோஷம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

செவ்வாய் தோஷம்
சர்ப்ப தோஷம்
புனர்பூ தோஷம்
மாங்கல்ய தோஷ
ஷஷ்டாஷ்டக தோஷ
துவி துவாதச தோஷம் 

ஆகியவை சரி பார்க்கபடவேண்டும்.
அடுத்து

குடும்ப ஸ்தானம்
புத்ர பாக்ய ஸ்தானம்
களத்திர ஸ்தானம்
ஆயுள் ஸ்தானம் 


ஆகியவைகளையும் ஆராய வேண்டும்.

Comments

  1. Thanks for sharing this amazing piece of content. Using our Thirumana Porutham In Tamil calculator you can find out the number of matching poruthams.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன

இந்த link  ல்,  பழைய அரிய தமிழ் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..   http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700  1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளது.

மனதை தொட்ட வரிகள்...!

` எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் ,  கரைந்து போவீா்கள் ; 😨😨😰😰😰 வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத... முள்ளு மரம் நான்...! தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் . பிஞ்சிலே பழுத்ததே.. எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான் அப்பன்... பத்து வயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட்டு... இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள . வாங்கும் பணத்துக்கு... குடியும் கூத்தியாரும் என... எவன் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப் பிழைப...