திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா? மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்! திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? 1) தினப்பொருத்தம்:- கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம். 2) கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, ம...
Comments
Post a Comment